
பிக்பாஸ் புகழ் தர்ஷன் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக நடிகை சணம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சனம் ஷெட்டி.இவரும் பிக்பாஸ் புகழ் தர்ஷனும் 2வருடமாக காதலித்து இரு வீட்டாரும் இணைந்து கடந்த மே மாதம் இருவருக்கும் நிச்சயம் நடத்தி வைத்துள்ளனர்.மேலும் ஜூன் மாதம் கல்யாணம் நடக்க விருந்ததாகவும்,ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் எனவும்,மேலும் நமக்கு நிச்சயம் நடந்தது பற்றி வெளியில் கூறினால் பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என தர்ஷன் கூறினார்.

மேலும் இவர் வெளிநாட்டில் ஷூட்டிங் சம்மந்தமாக செல்வதற்கு 15 லட்சம் ரூபாய் வரை தான் செலவழித்து உள்ளதாகவும் கூறினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்க உதவி புரிந்ததும் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்பு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும்,மேலும் தான் நடிகர்களுடன் தகாத உறவு வைத்திருப்பதால் என்னுடைய வளர்ச்சிக்கு பாதிப்பு உண்டாகும் என்று பொய்யான கருத்துகளை தர்ஷன் பரப்பி வருகிறார்.
மேலும் தர்ஷனின் நண்பர் மற்றும் தர்ஷன் இணைந்து தன்னை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.இதனால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி,கொலை மிரட்டல் உட்பட வழக்குகளின் கீழ் புகார் கொடுத்துள்ளதாகவும்,இதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு இந்த புகாரை மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
