Tuesday, April 28
Shadow

சங்கத்தலைவன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள திரைபடம் சங்கத்தமிழன். இந்த படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம்.

ஊழியர்களின் நலனுக்காக பாடுபடும் ஒரு சங்கத்தின் தலைவர் தான் சிவலிங்கம்(சமுத்திரக்கனி). ஃபேக்டரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ரங்கனுக்கு (கருணாஸ்) சிவலிங்கம் உதவி செய்வதுடன் கதை துவங்குகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறபோது ஃபேக்டரி உரிமையாளர்(மாரிமுத்து) சிவலிங்கம் மற்றும் ரங்கனை பழிவாங்கும்போது கதை சூடுபிடிக்கிறது.

படத்தில் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கம்யூனிச சித்தாந்தங்களை சொல்லியிருக்கிறார்கள், அதில் சில இடங்களில் நன்றாகவும் இருக்கிறது. நீதிக்காக போராடும் போது ஒருவர் சந்திக்கும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக காட்டியுள்ளனர். சில கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதம் அருமை. தன் நடிப்பால் கருணாஸ் தனித்து தெரிகிறார். ஈவு இரக்கமே இல்லாத ஃபேக்டரி உரிமையாளராக நடிப்பது தனக்கு பெரிய விஷயமே இல்லை என்பது போன்று சிறப்பாக நடித்திருக்கிறார் மாரிமுத்து.

பல போராட்டங்களை சந்திக்கும் அப்பாவி பெண்ணாக சுனுலக்ஷ்மி நன்றாக பொருந்துகிறார். ரம்யா சுப்ரமணியன் மற்றும் விக்ரம் ஆனந்த் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ்: சமுத்திரகனி, சுனுலக்ஷ்மி, சுப்ரமணியன் ஆகியோரின் நடிப்பு

மொத்தத்தில் அனைவரும் ஒருமுறை சங்கத்தலைவனை பார்த்து ரசிக்கலாம்