Monday, October 13
Shadow

சர்கார் பட பிரச்சனை முடிவுக்கு வந்தது அமைச்சர் கடம்பூர் ராஜு

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் சர்கார் இந்த படம் ரிலீஸ்யில் கதை திருட்டு பிரச்சனையால் மிக பெரிய சர்ச்சையை சந்தித்தது.ரிலிஸ்க்கு பிறகு படத்தின் ஒரு சில காட்சிகளால் பிரச்னை

தமிழக முன்னாள் முதல்வர் கொடுத்த இலவச பொருள்களை எரிப்பதுபோல ஒரு காட்சியாலும் வரலக்ஷ்மி கதாபாத்திரம் பெயராலும் படம் மேலும் பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது இதனால் சர்க்கார் படம் ஓடும் திரையரங்குகளில் ஆளும் கட்சியினர் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனால் கடந்த இரண்டு நாட்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சில திரையரங்குகளில் பேனர் கிழிக்கப்பட்டது அதோடு திரைஅரங்கு முன் போராட்டங்கள் நடைபெற்றது இதனால் ஒரு சில காட்சிகள் ரத்தும் செய்யப்பட்டது.

அதோடு கொஞ்சம் சலசலப்பும் ஏற்பட்டது இதற்கிடையில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு சர்க்கார் பிரச்னை முடிவுக்கு வந்தது என்று அறிவித்துள்ளார் காரணம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்ய படக்குழு ஒத்துகொண்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று அறிவித்துள்ளார்.அதோடு மறு தணிக்கை சான்றிதழ் செய்து கொடுக்கப்பட்டது