Saturday, June 27
Shadow

வசூலில் முந்திய ஜீவாவின் “சீறு” – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

தமிழ்நாடு முழுவதும் சீறு படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைச்சிருக்காம்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முதல் முறையா 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேரடியா சீறு படத்தை வெளியீட்டு நல்ல வசூலை அள்ளிக்கிட்டி இருக்காராம் .

இந்த சீறு படத்தைத் தொடர்ந்து சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இரண்டாவது இடத்தில் வானம் கொட்டட்டும் படமும், மூன்றாவது இடத்தில் ஹாலிவுட் படமான பேர்ட்ஸ் ஆஃப் பிரே படம் இடம்பிடிச்சிருக்குது. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் மிரட்டிய சைக்கோ திரைப்படம் இந்த வாரம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் என மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்ற 1917 திரைப்படம் 5ம் இடத்தை பிடிச்சிருக்காம்..

இதை அடுத்து இன்னிக்கு இந்த சீறு ஹேப்பி கேக் வெட்டி கொண்டாடினாய்ங்க