Friday, May 15
Shadow

“திரையரங்கையே தீயாக்கும் ‘சேனாபதி ரவி’… சந்தீப் கிஷனின் ‘பவர் பேட்டா’ கிளிம்ப்ஸ் ரசிகர்களை மிரள வைத்தது!”

“திரையரங்கையே தீயாக்கும் ‘சேனாபதி ரவி’… சந்தீப் கிஷனின் ‘பவர் பேட்டா’ கிளிம்ப்ஸ் ரசிகர்களை மிரள வைத்தது!”

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் மாஸ் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் , தற்போது இன்னொரு அதிரடி அவதாரத்தில் களமிறங்கியுள்ளார். பிரம்மாண்டமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படும் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பவர் பேட்டா’ திரைப்படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்றும் தயாரிக்கும் இந்தப் படத்தை, எழுத்தாளராக பல வெற்றிக் கதைகளை வழங்கிய இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், ஒரு சாதாரண அறிமுக வீடியோவாக இல்லாமல், முழு திரைப்படத்தின் மாஸ் தன்மையை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிளிம்ப்ஸ் தொடங்கும் தருணமே திரையரங்கில் “முதல் நாள் முதல் காட்சி” கொண்டாட்டத்தின் பரபரப்பை திரையில் உயிரோட்டமாக கொண்டு வருகிறது. ரசிகர்களின் ஆரவாரம், பட்டாசு சத்தம், வெடிக்கும் கொண்டாட்டம் ஆகியவற்றின் நடுவே ஹீரோவாக சந்தீப் கிஷன் சிகரெட் புகைத்தபடி தரும் என்ட்ரி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான “மாஸ் மொமென்ட்” ஆக மாறுகிறது. குறிப்பாக “சிங்கம்” குறித்து அவர் பேசும் வசனங்களும், அந்த மண்ணின் அதிகாரத்தை விவரிக்கும் விதமும் கதையின் பின்னணியில் அரசியல், ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை கலந்த வலுவான உலகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்தப் படத்தில் “சேனாபதி ரவி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன், இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, ரஃப் உடை அலங்காரம், மிரட்டலான உடல் மொழி மற்றும் கண்களில் தெரியும் கோபம் ஆகியவை அவரது கதாபாத்திரத்தை மிகப்பெரிய திரை ஆளுமையாக உயர்த்துகின்றன. குறிப்பாக திரையரங்க திரையில் பட்டாசு வீசும் காட்சி ரசிகர்களிடையே அதிக கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.

இயக்குநர் கிருஷ்ண சைதன்யா, ஒரு ஹீரோவை வெறும் மாஸ் கதாநாயகனாக மட்டுமல்லாமல், மக்கள் மனதில் பதியும் சக்திவாய்ந்த அடையாளமாக உருவாக்கும் திறனை இந்த கிளிம்ப்ஸிலேயே நிரூபித்துள்ளார். ஒரு சாதாரண சிகரெட் பற்றவைக்கும் தருணத்திற்கே கோபம், வெடிப்பு, ஆவேசம் ஆகிய உணர்வுகளை சேர்த்து திரையில் மிரட்டலாக காட்டியிருப்பது அவரது இயக்க திறமையை வெளிப்படுத்துகிறது.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒளிப்பதிவாளர் , பீரியட் காலத்து உலகத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். வழங்கிய பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை பலமடங்கு உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற மேற்கொண்ட எடிட்டிங் காட்சிகளுக்கு வேகத்தையும் தாக்கத்தையும் வழங்கியுள்ளது. மேலும் சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து வடிவமைத்துள்ள சவுண்ட் டிசைன், கிளிம்ப்ஸின் தீவிரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ், ஆக்ஷன், பீரியட் பின்னணி, அரசியல் ஆதிக்கம் மற்றும் ரசிகர்களை கவரும் திரைமொழி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்ட திரைப்படமாக ‘பவர் பேட்டா’ உருவாகி வருவது இந்த கிளிம்ப்ஸ் மூலம் தெளிவாகியுள்ளது.

நடிப்பு:

தொழில்நுட்ப குழு:

  • கதை, திரைக்கதை, இயக்கம் –
  • தயாரிப்பாளர்கள் – ,
  • தயாரிப்பு நிறுவனம் –
  • இசை –
  • ஒளிப்பதிவு –
  • படத்தொகுப்பு –
  • தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா
  • சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்
  • PRO – யுவராஜ்

கிளிம்ப்ஸ் லிங்க்

 

 

 

“Senapathi Ravi Sets Theatres on Fire… Sundeep Kishan’s ‘Power Peta’ Glimpse Leaves Fans Spellbound!”

Actor , known for consistently choosing intense and unconventional scripts in both Tamil and Telugu cinema, is back with yet another powerful avatar. The explosive glimpse of Power Peta, produced by , has now been unveiled and is already creating a massive buzz across social media platforms.

Produced by and , the film is directed by writer-turned-filmmaker . Released on the occasion of Sundeep Kishan’s birthday, the glimpse is far more than a regular teaser — it serves as a powerful statement of the film’s scale, intensity, and mass appeal.

The glimpse opens amidst the electrifying atmosphere of a first day first show celebration inside a packed theatre. Amid roaring fans, bursting crackers, and deafening whistles, Sundeep Kishan makes a fiery entry while smoking a cigarette, instantly commanding attention. His powerful dialogue about a lion and the way he describes the strength and dominance of the land hint at a world filled with power struggles, aggression, and deep-rooted authority.

Sundeep Kishan appears in a rugged and intense period look as “Senapathi Ravi,” a character that instantly exudes dominance and fearlessness. From stylish sunglasses and rustic costumes to his intimidating body language and fierce expressions, every frame amplifies his larger-than-life screen presence. A standout moment in the glimpse is when crackers are hurled at the theatre screen, perfectly capturing the celebratory madness associated with true mass entertainers.

Director proves his strength in creating a hero who feels both grounded and larger than life. His writing and staging elevate even the simplest moments into high-impact sequences. Notably, even a routine act like lighting a cigarette is transformed into a scene loaded with fury and attitude, showcasing the director’s cinematic flair.

On the technical front, cinematographer vividly recreates the period backdrop with stunning precision, giving the film a raw and immersive visual texture. ’s thunderous background score significantly boosts the intensity of every scene. National Award-winning editor sharpens the film’s pace with impactful cuts, while the sound design by Sachin Sudhakaran and Hariharan adds another layer of power to the overall cinematic experience.

The film’s shoot is currently progressing at a brisk pace, with the first schedule successfully completed. Judging by the glimpse, Power Peta promises to be a high-voltage entertainer packed with mass moments, action, political undertones, and a compelling period backdrop that is sure to resonate strongly with audiences.

Cast:

Technical Crew:

  • Writer & Director –
  • Producers – ,
  • Production House –
  • Music –
  • Cinematography –
  • Editing –
  • Production Design – Sabbani Ramakrishna, Monika
  • Sound Design – Sachin Sudhakaran, Hariharan
  • PRO – Yuvraaj

Glimpse Link: