Friday, October 4
Shadow

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி. ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி. ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அற்புதமான சாதனையை முறியடிக்கும் வகையில் முதல் நாள் வசூலை பதிவு செய்த ஜவான், தற்போது 400 கோடியை மிக வேகமாக கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடிகளை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் உள்ளிட்ட வேறு அனைத்து மொழிகளையும் சேர்த்து கணக்கிட்டால், ‘ஜவான்’ திரைப்படம் 479.99 கோடி ரூபாயை நிகர வசூலாக பெற்றுள்ளது.‌ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த திரைப்படம் 49.55 கோடி ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. இந்தியில் வெளியாகி வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று.. இந்த அளவிற்கு வசூல் செய்தது அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை கடந்து சாதனையை படைத்து வருகிறது.

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் அதன் வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. இது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டாவது வார இறுதியில் கூட பாக்ஸ் ஆபிஸில் வலுவாக வசூல் செய்து வருகிறது. இரண்டாவது வார இறுதியில் இந்தியில் மட்டும் 82 கோடியே 46 லட்சத்தை வசூலித்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் இரண்டாவது வார இறுதியில் மொத்தம் 88 கோடியே 66 லட்சத்தை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

‘ஜவான்’ திரைப்படம் இந்தி திரையுலக சந்தையில் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், சர்வதேச திரையுலக சந்தைகளிலும் அலைகளை உருவாக்கியுள்ளது என்பது இந்த சாதனையை மேலும் வலிமையானதாக ஆக்குகிறது.‌

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியானது.‌

*Shah Rukh Khan’s “Jawan” (Hindi) has achieved an unprecedented milestone, being the fastest film to reach the 400 crore mark in just 11 days and amassing an astonishing 430.44 crore exclusively in Hindi!

The Shah Rukh Khan starrer which has proved to be nothing less than a festival for cinema goers across the country has sent the box office in a tizzy! Having booked a phenomenal record-breaking opening, Jawan has now become the fastest film to cross 400 Cr. The film has garnered “record making’ numbers and has broken many a records on its way!. Within a mere 11 days, “Jawan” has amassed a staggering 430.44 crore in the Hindi language alone. When considering all languages, the film boasts a formidable India net collection of 479.99 crore, with the languages contributing an impressive 49.55 crore, a feat rarely seen for a Hindi release dub, on the verge of surpassing the 50 crore milestone.

“Jawan” continues its triumphant journey at the box office, leaving both audiences and trade experts in awe with its astonishing numbers. Even during its second weekend, the film maintained a strong grip on the box office, securing an impressive 82.46 crore in Hindi. When factoring in all languages, the film’s total stands at a remarkable 88.66 crore!

What makes this achievement even more remarkable is that “Jawan” has not only broken records in its home market but has also made waves in international markets.

‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theaters on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.