Thursday, May 30
Shadow

சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோ திறப்பு விழா மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் அரசி படத்தின் தலைப்பு வெளியீடு


புதுப்பொலிவுடன் உருவான சாகினா ராஜராஜாவின் சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோவை வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்
“கல்விக்கோ” கோ.விஸ்வநாதன் திறந்துவைத்து வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்
ஏ.ஆர்.கே.ராஜராஜா- ஆவடி S.வரலட்சுமி தயாரிப்பில்
சூரிய கிரண் இயக்கத்தில் உருவான
“அரசி” படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.

இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். பட அதிபர் கே.ராஜன், இயக்குனர்/ வசனகர்த்தா லியாகத் அலிகான், இயக்குனர் வி.சேகர், இசையமைப்பாளர் தினா, இயக்குனர் ஏ.ஜெ..முருகன், நடிகர்கள் சாய்தீனா, காதல் சுகுமார், கல்யாண் சக்கரவர்த்தி, டி.எஸ்.ஆர்.சுபாஷ், ஒளிப்பதிவாளர் செல்வா. ஆர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். அனைவரையும் ஏ.ஆர்.கே ராஜராஜா-ஆவடி S.வரலட்சுமி வரவேற்றனர். சாகினா ராஜராஜா நன்றி கூறினார்.