
கனா பட வெற்றியை அடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரியோராஜை ஹீரோவாக வைத்து தனது இரண்டாவது படத்தை துவங்கினார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை யூடியூபில் பிரபலமான ஸ்மைல் சேட்டை புகழ் கார்த்திக் இயக்கியுள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்துக்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரத்துக்காக நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டீசரை படக்குழு பயன்படுத்தியுள்ளது.
கனா படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்த நிலையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
