Wednesday, December 17
Shadow

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

பொதுவாக பண்டிகை காலங்களில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் ஜனவரி 2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று தமிழ் சினிமாவில் மும்மனைப் போட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பா மூன்று முன்னணி நடிகர்கள் களத்தில் இறங்குகிறார்கள் அதில் விஜயின் ஜனநாயகம் சிவகார்த்திகேயனின் பராசக்தி பிரபாஸ் அவர்களின் ராஜா சாப் இந்த மூன்று படங்கள் மோதுகின்றன. இந்த மும்முனைப்போட்டி நிச்சயமாக கடுமையான ஒரு போட்டியாக அமையும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை முக்கிய காரணம் விஜயின் கடைசி படம் காரணம் அவர் அரசியலுக்கு செல்வதால் அவருடைய கடைசி படம் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது ஆகவே ரசிகர்களிடம் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல சிவகார்த்திகேயனின் பராசக்தி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கின்ற ஒரு படம் காரணம் இந்த படத்தின் போஸ்டர்களும் சிவகார்த்திகேயனின் தோற்றமும் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆகவே இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

 

பொங்கலன்று மும்முனைப் போட்டு என்று சொல்வதை விட இருவருக்கான போட்டி தான் கடுமையான போட்டியாக இருக்கும் காரணம் பிரபாஸ் மற்ற மாநிலங்களில் தான் இவர்களுக்கு போற்றியாக இருப்பார் ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் விஜய் சிவகார்த்திகேயனின் போட்டிதான் மிகப்பெரிய போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகம் படத்தில் விஜய் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன் நீ ஒரு போலீசாக நடித்த படம் போக்கிரி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது ஆகவே இந்த படமும் அதற்குரிய அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஜெயம் ரவி அதர்வா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இவரின் படங்கள் என்றாலே வெற்றி படமாக தன் அமையும் ஆகவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது எனவே இந்த பொங்கல் போட்டி மிகவும் ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் ஆனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.