Wednesday, April 22
Shadow

உயிரிழப்புக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்…; கண்கலங்கிய கமல்

தூத்துக்குடி மாவட்ட மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 100 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று 100வது நாள் போராட்டத்தில் இது பெரும் கலவரமானது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து 10 பேர் சுட்டுக்கொலை

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்.

அவர்களை கண்டதும் கமலும் கண் கலங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது…

இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? என்று இதுவரை தெரியவில்லை. முதலில் அதை தெரியப்படுத்தியாக வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு பேரம் பேசி பயனில்லை. அவர்களின் உயிரிழப்புக்கு மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான்.

மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது நடுநிலையான மருத்துவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்.

இதை இப்படியே விட்டு விட்டு போக முயாது.” என கண் கலங்கிய படியே கமல் பேசினார்