Tuesday, March 21
Shadow

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் புதிய படம் குறித்த தகவல் வெளியீடு

மேயாத மான், மெர்குரி படங்ககளை தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 3’, இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.