Sunday, October 12
Shadow

“மலையப்பன்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக சுவாமிநாதன் ராஜேஷ்

“மலையப்பன்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக சுவாமிநாதன் ராஜேஷ்

இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவர்களின் இசையில், பின்னணி பாடகர் பிரசன்னா குரலில் “மலையப்பன்” திரைப்படத்தின் முதல் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“லோக்கல் சரக்கு”, “கடைசி தோட்டா” போன்ற படங்களுக்கு இசையமைத்து, பல பாடல்களை ஹிட் ஆக்கியவர் சுவாமிநாதன் ராஜேஷ். அதனைத் தொடர்ந்து வெளியான “கண்ணோரமே” எனும் அவரது இசை ஆல்பமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.

இந்த வெற்றிகளை கண்டு மகிழ்ந்த இயக்குநர் குரு சந்திரன் – கதாநாயகனாகவும், இயக்குநராகவும் பணியாற்றி வரும் தனது புதிய திரைப்படமான “மலையப்பன்” படத்திற்காக சுவாமிநாதன் ராஜேஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

படத்தின் கதை – மலைமேல் அருள்புரியும் தெய்வமாகிய “மலையப்பன்” குறித்து அமைகிறது. கதையை கேட்ட உடனே சுவாமிநாதன் ராஜேஷ், ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்து ட்யூன்களை தயாராக்கியதாக இயக்குநர் தெரிவித்தார். ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு ஸ்டைலில் அமைந்துள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த இயக்குநர் குரு சந்திரன், இசையமைப்பாளரை அன்புடன் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

இந்த படத்திற்காக பாடலாசிரியர் காதல்மதி எழுதிய “வேஷங்கட்டிக்கிட்டு” என்ற பாடலை, பிரசன்னா பாடியுள்ளார். வீரமிக்க பாணியில் அமைந்த இந்த பாடல் பதிவு செய்யப்பட்டவுடன், படக்குழுவினர் அனைவரும் இசையமைப்பாளரை கைதட்டி பாராட்டினர்.

மேலும், “மலையப்பன்” திரைப்படத்தில் பிரபல முன்னணி பாடகர் ஒருவரை பாட வைக்க சுவாமிநாதன் ராஜேஷ் தற்போது முயற்சி செய்து வருகிறார்.

கிளாமர் சத்யா
PRO