
அஜீத் புகழை பாட்டாகவே பாடப் போகும் அப்புக்குட்டி..!
அஜீத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது புகழை ஒரு பாட்டாகவே தான் நடிக்கும் படமொன்றில் பாடப் போகிறாராம் நடிகர் அப்புக்குட்டி.
அப்புக்குட்டியை தன் கையால் தனியாக போட்டோ ஷூட் எடுத்து, அவரது சொந்தப் பெயரான சிவபாலன் என்பதையே இனி திரையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அஜீத்.
அந்த நன்றிக்கடனுக்காக அப்புக்குட்டி தற்போது நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அஜித்தின் பெருமை பற்றி பாடுவது போல ஒரு பாடல் இடம்பெறுகிறதாம்.
'காகித கப்பல்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் 'அம்மா அப்பா குடும்பத்தை பாரு...' என்ற தொடங்கும் அந்த பாடலை அப்புக்குட்டி பாடுவதுபோல் படமாக்கியிருக்கிறார்களாம். இந்தப் பாடலை விவேகா எழுதியுள்ளார். நிஜாம் இசையமைத்துள்ளார். சாண்டி நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்தை 'மறந்தேன் மெய்மறந்தேன்', 'சொல்லித் தரவா', 'அன்பா அழகா' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்குகிற...