
ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களில் இந்த படத்தின் செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
‘அஜித் 57’ படக்குழு தற்போது ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஹெலிகாப்டர் காட்சி ஒன்று அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Carinthia பகுதியில் உள்ள ‘The mountain Hotel என்ற ஹோட்டலில் 35 அறைகள் படக்குழுவினர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தயாரிப்பாளர் செலவு செய்து வருவதாகவும், இவர்களுடைய உணவுத் தேவைக்கு இந்தியா...