ஜி.விபிரகாஷ்குமார்யின் “ப்ருஸ்லீ” படபிடிப்பு முடிந்தது
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் புரூஸ்லீ. கிரித்தி கர்பண்டாஸ் என்ற மும்பை மாடல் ஹீரோயின். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுபட்டி ராம்தாஸ், ஆனந்தராஜ், மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்கிறார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார்.
சாதாரண இளைஞன் ஒருவன் தன்னை புரூஸ்லீ ரேன்ஞ்சுக்கு நினைத்துக் கொண்டு செய்யும் விஷயங்களை சொல்லும் படம். ஒரு கட்டத்தில் அவன் நிஜமாகவே புரூஸ்லீ மாதிரி ஆக வேண்டிய சூழ்நிலையும் வருகிறது. போலி புரூஸ்லீ நிஜ புரூஸ்லீயாக எப்படி மாறுகிறார் என்பது கதை. காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து தயாராகிறது.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. தற்போது டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, பணிகள் நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் பின்...