நா. முத்துக்குமார் இழப்பில் இதயம் கரைகிறது.!
இறுகி உடைந்த மனதோடு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்! ஏழு வருடங்களா நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த எழுவருடங்களில் மூன்று முறை "தமிழர் விருதினை" பெற்ற ஒரே கவிஞன் நா.முத்துக்குமார். அவருடைய பெரும் ஆற்றலுக்காகவும், சிறந்த பாடல்களுக்காகவும் இந்த விருதினை வழங்கினோம்!
அனால் பூமிப்பந்தின் உச்சியில் வாழ்கின்ற எமக்கு! உச்சந்தலையில் இடியாய் விழுந்தது நா.முத்துக்குமார் மரணித்த செய்தி.
அறிவுமதி அண்ணன் கவிதைக் காட்டில் பூத்துக் குலுங்கிய புதுக்கவிதை.
புதுமைக் கவிஞர்களில் நா.முத்துக்குமார் அண்ணனும் ஒருவர். கவிஞர்கள் வாலி அய்யா, புதுக்கவிதைத் தாத்தா மு.மேத்தா, அண்ணன் அறிவுமதி, கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் வரிசையில் எந்நேரமும் என் மனதில் நிறைந்தவர் நா.முத்துக்குமார்.
அவருடன் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அவர் பாடல்கள் வெளியாகும் போது அவரு...