Monday, December 6
Shadow

Tag: வனம்

வனம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
கோல்டன் ஸ்டார் புரொடக்சன்ஸ் தயாரித்து வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வனம். இந்தப் படம் ஸ்ரீகண்டன் ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். வனப்பகுதியில் புதிதாக ஒரு நுண்கலை கல்லூரி துவங்கப்படுகிறது. இந்தக் கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட அறையில் வசிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஆராயத் துவங்கும் கதாநாயகன் வெற்றிக்கு சில திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பின்ன என்ன நடக்கிறது என்பதே வனம் படத்தின் கதை. தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்களுக்குப் பிறகு வெற்றி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முதல் இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் நடிக்க ரொம்பவே சிரமப்படுகிறார்.மல்லி என்ற மலைவாழ் பெண்ணாக அனு சித்தாரா. தனக்குக் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நன்றாக கையாண்டுள்ளார்...
CLOSE
CLOSE