அப்பா – மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது அஸ்வின் – சுவாதி ரெட்டி நடிக்கும் ‘திரி’ திரைப்படம்
தமிழ் சினிமாவில் தந்தை - மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் 'திரி'. 'சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த 'திரி' படத்தை அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கி இருக்கிறார். எம். வெற்றிக்குமரன், எஸ். ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகிய மூவரும் இந்த 'திரி' படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக மட்டுமில்லாமல் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்து வருவது 'திரி' படத்திற்கு பக்கபலம்.
அஸ்வினின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக அனுபமா குமார், மிரட்டலான வில்லனாக ஏ.எல். அழகப்பன் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களி...
