அவனே ஸ்ரீமன் நாராயணா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் என்பவர்களுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது அவனே ஸ்ரீமன் நாராயணா. ராமாயண நாடகம் போடுபவர்கள் கொள்ளையடித்து புதைத்து வைத்த செல்வத்தை கொள்ளையடிப்பது யார் என்ற போட்டி தான் படத்தின் கதை.
கூடவே அண்ணன் தம்பிகளான இரு வில்லன்களுக்கு இருக்கும் பிரச்சனையும் இவற்றை ஹீரோ எப்படி ஸ்மார்ட்டாக கேண்டில் செய்கிறார் என்பதும்
ராமராமா எனும் வில்லனுக்கு பெயர் வைத்து குசும்பு செய்தாலும் படம் நெடுக இந்துத்துவ நெடி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் நெருடல் இல்லாமல் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக கடத்தியுள்ளார்கள்.
படத்தில் உள்ள நடிகர்களை குறிப்பிடும் போது எல்லோரின் குறிப்புகளையும் மொத்தமாக எடுத்துக்கொள்கிறார் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி. ஒவ்வொரு சீனிலும் மாஸ் சீன் காட்டுகிறார்..படத்தை ஒட்டுமொத்தமாக தூக்கிச் சுமக்கும் அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் போரடிக்கவே இல்லை. அட்டகாசம் ப்ரோ. இடைவேளை ...
