எப்பவுமே டாப்பு தான் வடிவேலு கத்திச் சண்டை படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு
பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு காமெடியனாக களம் இறங்கும் படம் கத்திச்சண்டை. அதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இன்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் பேசிய வடிவேலு, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப பேர் சொன்னாங்க, ரொம்ப பேர் கேப்விட்டு, இப்ப வந்து இருக்கீங்க. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படம் நடிக்கறீங்கன்னு சொன்னாங்க. சத்தியமா, எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது. ஆப்பும் கிடையாது. எப்பவுமே இந்த வடிவேலு டாப்பு தான். வாட்சாப், அரசியல், பேப்பர்னு எல்லாத்துலையும் நான் பயன்படுத்தின வசனம் தான் வருது. 24 மணி நேரமும் சினிமா பத்திதான் நினைச்சுக்கிட்டு இருப்பேன். கத்திச் சண்டை படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கத்திச் சண்டை படத்துல கத்தி சண்டையும் கிடையாது, கத்திப் பேசுற சண்டையும் கிடையாது, இது ஒரு புத்திச் சண்டை. படத்துல எனக்கு ...
