காளிதாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
தற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல். இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் இதன் பின்னணியை கொண்டு காளிதாஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. சரி படத்திற்குள் போகலாமா?
நடிகர் பரத் இப்படத்தின் ஹீரோவாக ஒரு போலிஸ் அதிகாரியாக வருகிறார். காளிதாஸ் கேரக்டரான அவருக்கு மனைவியாக அன் ஷீ ட்டெல். இருவரும் இடையே முகம் சுளிப்பு. குறிப்பாக அவரின் மனைவி வித்யாவுக்கு. காரணம் கணவர் தன்னை கண்டுகொள்ளாமல் வேலை வேலை என பிசியாக இருக்கிறார் என்பதே.
இதற்கிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள். இறந்த மூவருமே பெண்கள். ஒரே மாதிரியான சம்பவங்கள்.கொலையா தற்கொலையா என பல கேள்விகள்.
இதனால் பரத் மற்றும் போலிஸ் குழு மிகவும் தீவிரமாக இந்த சம்பவத்தில் விசா...
