சீறு திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)
றெக்க இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிகர் ஜீவா நடிப்பில் வெளயாகியுள்ள படம் சீறு... இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்..
மணிமாறன் (ஜீவா) மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார்.
இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார்.
அதற்காக சென்னையில் உள்ள மல்லி என்பவரை அழைக்கின்றார், மல்லி ஜீவாவை தேடி மாயவரம் வர, அங்கு ஜீவா தங்கச்சிக்கு மல்லி உதவ, அன்றிலிருந்து ஜீவா மல்லியை தன் நண்பனாக நினைக்கின்றார்.
அவரை தேடி ஜீவா சென்னை வர, அப்போது தான் தெரிகின்றது மல்லி உயிருக்கு ஒரு பெரிய ஆள் மூலம் ஆபத்து என்று ஜீவாவிற்கு தெரிய வர, அதன் பிறகு மல்லியை ஜீவா காப்பாற்றினாரா? அந்த பெரிய ஆள் யார்? என்பதே ...
