சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்
சட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
விறுவிறுப்பான விசாரணை, அற்புதமான நடிப்பு, தரமான தொழில்நுட்பக் கலைஞர்கள்… ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் ‘சட்டமும் நீதியும் 2’!
கோர்ட் ரூம் டிராமா வகை வெப்சீரிஸ்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ‘சட்டமும் நீதியும் 2’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
முதல் பாகம் தமிழ் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு, பிற மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பு மற்றும் மறுஉருவாக்கம் எனப் பல்வேறு நிலைகளில் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே படக்குழுவினரும் நட்சத்திரங்களும் இணைந்து உருவாக்கியுள்ள இரண்டாம் பாகம், விறுவிறுப்பான குற்ற விசாரணையையும் சட்டத்தின் நுணுக்கங்களையும் மையமாகக் கொண்டு பயணிக்கிறது.
ஒரு விருந்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட...
