பதினெட்டு மணி நேரத்தில் ஆறு லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ டிரைலர்
சுவாரசியமான திருப்பங்களும், எதிர்பாராத திருப்பு முனைகளும் அமைந்த கதை களத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்.... சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி - காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'புரியாத புதிர்' படத்தின் இரண்டு நிமிட டிரைலரே அதற்கு சிறந்த உதாரணம். 'ரெபெல் ஸ்டுடியோ' தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படத்தின் விநியோக உரிமையை 'ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்' சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே சதீஷ் குமார். திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த 'புரியாத புதிர்' படத்தின் விறுவிறுப்பான டிரைலர் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது....வெளியிடப்பட்ட பதினெட்டு மணி நேரத்திலேயே ஆறு லட்சம் பார்வையாளர்களை இந்த டிரைலர் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
"தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும...
