போத்தனூர் தபால் நிலையம் (ரேட்டிங் 4/5)
Passion Studios தயாரிப்பில் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “போத்தனூர் தபால் நிலையம்”. இயக்குனர் பிரவீன், இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1990-களில் கதை நகரும்படியாக படம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் அருகே போத்தனூர் என்ற ஊரில் தபால் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. அந்த தபால் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார் நாயகனின் தந்தை.
தனியாக கம்ப்யூட்டர் பிசினஸ் ஆரம்பிக்க, லோனுக்காக ஒவ்வொரு வங்கியிலும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் நாயகன் பிரவீன்.
ஒரு வங்கியில் லோன் ரெடியாகும் சமயத்தில், கடைசி நேரத்தில் அந்த லோன் ரத்தாகி போகிறது. என்ன செய்வது என்றறியாது நிற்கிறார் நாயகன்.
இச்சமயத...
