மகளிர் சங்கங்களுக்கு மம்முட்டி மறைமுக பதிலடி..!
வரும் அக்-7ஆம் தேதி மம்முட்டி நடித்த ‘தோப்பில் ஜோப்பன்’ படம் ரிலீஸாகிறது.. ஜானி ஆண்டனி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, மம்தா மோகன்தாஸ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் அக்மார்க் குடும்பப்படமாக உருவாகியுள்ளதாம்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்முட்டி, “இந்தப்படத்தில் மதுபானம் நிரம்பிய பாட்டிலையோ, கிளாசையோ கையில் வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் நடப்பேனே தவிர, குடிப்பது போல நடிக்கவில்லை” என கூறினார்..
என்னடா திடீரென இவர் இப்படி பேசுகிறாரே என நினைக்கும்போதே அடுத்ததாக, “எப்படி சாப்பாட்டு வகைகளில் ஒருத்தருக்கு காரம், ஒருத்தருக்கு உப்பு என சுவை மாறுபட்டு பிடிக்குமோ, அதேபோலத்தான் படங்களிலும் நான் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.. தயவுசெய்து அதை படமாக மட்டும் பாருங்கள்.. இந்தப்படம் குடும்பத்தினருடன் அனை...
