மீசையை முறுக்கு 2 – திரைவிமர்சனம் (Rank 3.5/5)
மீசையை முறுக்கு 2 – இசையைத் தாண்டி நம்பிக்கையைப் பேசும் மூன்று தலைமுறைக் கதை!
ஹிப் ஹாப் ஆதி நடிப்பு, இசை, இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்று உருவாக்கியிருக்கும் ‘மீசையை முறுக்கு 2’, முதல் பாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கைப் பயணம் மையமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் முழுவதும் இசை, அங்கீகாரம், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் இசைப் பயணத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
கானா இசை மீது இருக்கும் புறக்கணிப்பையும், அதற்கான அங்கீகாரத்தைப் பெற கலைஞர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தையும் எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. கானா பாடல்கள் சபாக்களிலும் மேடைகளிலும் ஒ...
