மீண்டும் இணையும் கலையரசன் காளிவெங்கட்
பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற கூட்டணியை வைத்துத்தான் அடுத்தப்படத்தை எடுப்பார்கள். ஆனால் தோல்வியடைந்த காம்பினேஷனை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் தான்.
வளர்ந்து வரும் நடிகர்களான கலையரசன், காளி வெங்கட் இருவரும் 'டார்லிங்-2' படத்தில் நடித்தனர்.
அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன்பிறகு 'ராஜா மந்திரி' என்ற படத்தில் அண்ணன் தம்பியாக இணைந்து நடித்தனர்.
சுசீந்திரனின் உதவியாளரான உஷாகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் ஆண்பாவம் ஸ்டைலில் ரசிக்கும்படிதான் இருந்தது.
சரியான பப்ளிசிட்டி இல்லாததினால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்கிற அளவில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ‛இறுதிசுற்று' படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஜானகி ராமன இயக்கும் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப...
