முதன்முறையாக குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட “என்னோடு விளையாடு”
தமிழில் முதன்முறையாக குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட “என்னோடு விளையாடு”படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்
சில படங்கள் காஸ்டிங் எனப்படும் இணைந்து நடிக்கும் நடிக, நடிகைகளாலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கும். சில படங்கள் அதன் கதைக்களத்தை கொண்டே எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் மிக மிக சில படங்களே இரண்டுமே சிறப்பாக அமைந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த படங்கள் வரிசையில் அமைந்துவிட்டது ’என்னோடு விளையாடு’ படம்.
காதல் படத்தின் மூலம் நம் எல்லோர் வீட்டுப்பிள்ளையாகவே ஆகிவிட்ட சின்ன தளபதி பரத்தும், மத யானைக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி கிருமி வரை மிக வேகமாக வளர்ந்து வரும் கதிரும் ’என்னோடு விளையாடு’ படத்துக்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் கேம்லிங் என்ற பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட களம் அரிதாகத் தான் அமையும். அதிலும் இத...
