முத்தக்காட்சியை நீக்கியதால் “ யூ “ சான்றிதழ்“ மேல் நாட்டு மருமகன் “ படத்திற்கு
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.
படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு வசனத்தையும், நாயகன், நாயகி நடித்த முத்தக்காட்சியையும் நீக்கினால் தான் யூ சான்றிதழ் கொடுப்போம் என்ற...
