‘யாக்கை’ படம் மூலம் வில்லனாகும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்
ஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான இவருடைய 'ஜோக்கர்' திரைப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது 'யாக்கை' திரைப்படத்தின் வில்லனாக குரு சோமசுந்தரம் அவதாரம் எடுத்திருப்பது, தமிழக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் 'யாக்கை' படத்தை 'பிரிம் பிச்சர்ஸ்' சார்பில் தயாரித்து வருகிறார் முத்துக்குமரன். கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் 'யாக்கை' திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது மேலும் சிறப்பு.
"ஜோக்கர் திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், 'யாக்கை' ...
