ரஜினி – இரஞ்சித்வுடன் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!. – கவிஞர் உமாதேவி
“மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான “வீரத் துரந்தரா” பாடலை எழுதியவரும் இவரே.
மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன், இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி, வீரதுரந்தரா தொடர்ந்து உங்கள் பாடல்களின் ஹிட் ரகசியம் என்ன?
ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப்பாடலுக்கான முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும் கேட்கிறேன். இயக்குநர்கள் அந்த பாடலுக்கான சூழலை சொன்னதும்... என்னை பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்திற்குள் கொண்டு செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி ரகசியம் என்று எதுவும் இல்லை.
நீங்கள் தமிழ் ...
