லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் தமிழ் படம்
தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்புக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் , நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர் , அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தாயரிப்பார் என்று நான் நினைத்ததில்லை. இப்போது...
