விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…
ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.... 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி உள்ளன... ஆனால் அவற்றுள் வெகு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய ஆற்றல் இருந்திருக்கின்றது... அந்த வகையில், தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தயாரிப்பு துறையில் களம் இறங்கி இருக்கும் 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனர் ஜி டில்லிபாபு, தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற 'உறுமீன்' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த ஜி டில்லி பாபு, தற்போது ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் 'மரகத நாணயம்' படத்தை தயாரித்து வருகிறார்.... அதனை தொடர்ந்து, தங்களுடைய '...
