ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைகாட்சியில் “எமன்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா
தமிழக ரசிகர்களை உற்சாகத்துடன் ஆட்டம் போட செய்த "நாக்க முக்க..." மற்றும் "ஆத்திச்சூடி..." பாடல்களை என்றுமே யாராலும் மறக்க முடியாது....நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய இந்த பாடல்கள் இரண்டும் இசைத் துறையில் ஒரு புதுமையை உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறது 'எமன்' படத்தின் "என் மேல கை வச்சா காலி..." பாடல். 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும் "என் மேல கை வச்சா காலி..." பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம் சி (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.
"என் மேல கை வச்சா காலி..அந்துடும் டா உன்னோட தாலி..." என்ற வார்த்தைகளையுடன் ஹிப் - ஹாப் தாளத்தில் ஆரம்பமாகும் பாடலை, தனக்குரிய தன...
