பிளாக் கோல்ட் – திரைவிமர்சனம். (Rank 3.5/5 )
BLACK GOLD – தலைமுடிக்குப் பின்னால் மறைந்திருக்கும் கடத்தல் சாம்ராஜ்யம்! விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர்!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான கதைக்களங்களுடன் சில திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில், இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு தொழிலான தலைமுடி ஏற்றுமதி வியாபாரத்தை மையமாக வைத்து, ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் BLACK GOLD.
வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவரது தந்தையாக வரும் லிவிங்ஸ்டன், ஒரு பிரபலமான தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஏ. வெங்கடேஷ் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கிடையே உருவாகும் தொழில் போட்டியும், அதனால் ஏற்படும் எதிர்பாராத பிரச்சினைகளும்தான் கதையின் முக்கியப் பின்னணி.
திருப்பதியிலிருந்து சுமார் ஐ...
