Wednesday, April 24
Shadow

Tag: bootham

மை டியர் பூதம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராமநாராயணன் டைப் படத்தை தியேட்டரில் பார்த்த உணர்வை தருகிறது மை டியர் பூதம். மஞ்சப்பை, கடம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராகவனின் 3வது படம் தான் இந்த மை டியர் பூதம். குழந்தைகளுக்கான படமாக அவர் இயக்கி உள்ள மை டியர் பூதம் 90களில் குழந்தைகளாக இருந்தவர்களை மகிழ்விக்கும், 2022 கிட்ஸ்களை கவருமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை தி...