
சக்தி சௌந்தர் ராஜா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் “டெடி”
நடிகர் ஆர்யா ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகர் என்று இருந்தவர இன்று எங்கு இருக்கிறார் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டார் தொடர் தோல்விக்கு பிறகு கஜினிகாந் படம் அவருக்கு மிக பெரிய ஆறுதல் ஆனாலும் அதன் பின்னரும் பெரிதாக பட வாய்ப்பு இல்லை சிறுது நாளுக்கு முன் கஜினிகாந்த் நாயகியுடன் டும்டும் என்ற செய்தி வந்தது இப்போது மீண்டும் ஒரு நல்ல செய்தி
சிபிராஜ் நடித்த நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜெயம்ரவி நடித்த மிருதன், டிக் டிக் டிக், படங்களை இயக்கியவர் சக்தி செளந்தரராஜன். இவர், அடுத்தபடியாக ஆர்யாவை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்திற்கு டெடி என பெயரிட்டுள்ளனர்.
கஜினிகாந்த் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவை வைத்து படம் தயாரிக்கிறார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. இமான் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது....