
என்கிட்ட மோதாதே – திரைவிமர்சனம் (கமல் ரஜினி ரசிகர்களின் கௌரவம்) Rank 4/5
தமிழ் சினிமாவின் நிரந்தர ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களின் மனதை பிரதிபலிக்கும் படம் தான் என்கிட்டே மோதாதே படத்தை இயக்குனர் மிகவும் வித்தியாசமாக கையாண்டுள்ளார், ரசிகர்கள் என்றால் கொடி கட் அவுட் வைப்பவன் இல்லை புத்திசாலியும் மனிதாபிமானமும் உள்ளவர்கள் அதோடு சமுக சிந்தனை உள்ளவர்கள் என்றும் மிக தெளிவாக அழகா கூறியுள்ளார் .
படத்தில் ரசிகர்கள் மோதல் மட்டும் இல்லாமல் காதல் அரசியல் நட்பு பாசம் குடும்பம் இவை அனைத்தையும் கலந்த ஒரு கலவையாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த கலவை என்பதால் திகட்டவில்லை ரசிக்க வைத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் .
1988யில் நடக்கும் கதை என்று மிகவும் உன்னிப்பாக கவனித்தால் அதில் எந்த குறையும் இல்லமால் படத்தை இயக்கியுள்ளார் காட்சிகளை மிகவும் கவனிப்பாக சிகை அலங்காரம் பேக் ட்ராப் போஸ்டர்ஸ் தியேட்டர் இப்படி எல்ல்தி...