“எக்ஸாம்” – வெப் சீரியஸ் விமர்சனம் Rank 3.5/5
குரூப் தேர்வுகளின் இருண்ட உலகை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அதிரடி வெப் சீரிஸ் – “எக்ஸாம்” ஒரு தரமான சமூக திரில்லர் அனுபவம்!
கிராமத்து மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் நெஞ்சை வருடும் வகையில் திரையில் பதிவு செய்த இயக்குநர் ஏ. சற்குணம், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட தளத்தில் களமிறங்கி, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு பதட்டம் நிறைந்த அரசியல்-சமூக திரில்லராக “எக்ஸாம்” வெப் தொடரை உருவாக்கியுள்ளார். Amazon Prime Videoவில் வெளியாகவுள்ள இந்த தொடர், சாதாரண தேர்வு மோசடி கதையாக இல்லாமல், இளைஞர்களின் கனவுகளை விழுங்கும் ஒரு மிகப்பெரிய ஊழல் அமைப்பின் பின்னணியை அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது.
குரூப் தேர்வுகள், குரூப் 1 தேர்வுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அதிகார துஷ்பிரயோகம், பணம், அரசியல் செல்வாக்கு, நடுத்தர குடும்ப இளைஞர்களின் போராட்டம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த ஒ...
