
இந்திய சரித்திரத்தின் உண்மை கதை தான் “கெளதமி புத்ர சாதகர்ணி”
எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்..அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் கெளதமி புத்ர சாதகர்ணி
ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
பாலகிருஷ்னாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது.
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.
ஆயிரம் படங்களுக்கு மேல் மொழிமாற்றம் வசனம் எழுதிய தனக...