
கண்ல காச காட்டப்பா -திரைவிமர்சனம் சிரிப்புக்கு உத்திரவாதம் Rank 5/3
1991-ம் ஆண்டு ‘வானமே எல்லை’ படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட, மேஜர் கெளதம் இயக்கியிருக்கும் முதல் படம் இது.
தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டித் தருவதற்காக மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் 100 கோடி ரூபாயை அபேஸ் செய்கிறார் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர். அந்தப் பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பியும் வைத்திருக்கிறார்.
இப்போது ஆட்சியில் சிக்கல். பதவிக்கு ஆபத்து வரும் சூழல் இருப்பதால் பணத்தை இன்னும் பத்திரப்படுத்த நினைக்கிறார் அமைச்சர். அவருடன் கூடவே இருக்கும் அல்லக்கையான கவிதாலயா கிருஷ்ணன், அந்தப் பணத்தை கொலம்பியா நாட்டில் இருக்கும் ஒரு வங்கியில் டெபாசிட் செய்ய ஐடியா கொடுக்கிறார்.
இதன்படி மலேசியாவிற்கு சென்று ஹவாலா பணத்தை வாங்கி, அதனை கொலம்பியா கொண்டு சென்று வங்கியில் டெபாசிட் செய்ய ஒரு பொறுப்பான நம்பிக்கையான ஆள் வ...