ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரியின் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ்
ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரி வழங்கும் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழா ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த ஜூரிக்கள் ரெஜினா ஜேப்பியார், அப்துல் கனி, நந்தகுமார் மற்றும் கலைச்செல்வி, அமிர்தசெல்வி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர். அவர்களுக்கு ப்ரியா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
அப்போது, "இந்த விருது பட்டியலில் எங்களுக்கு தேர்ந்தெடுக்கும் வேலை அதிகம் இல்லை, ஒவ்வொரு துறையையும் எடுக்கும்போது இவர் தான், இவருக்கு தான் என ஒருமித்த கருத்தோடு எந்த வித குழப்பமும் இல்லாமல் தேர்ந்தெடுத்தோம். சிறந்த பெண்மணிகளை உங்கள் முன் நிறுத்த நினைத்தோம். இந்த நிகழ்ச்சி பல குழந்தைகளின் நலனுக்...
