தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.
அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.
இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது ''தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள்.நாங்கள்ஒரே குடும்பம்.
இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம் .
இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.
தயாரிப்பாளர...
