Thursday, March 27
Shadow

Tag: #jiiva #gouthammenon #neethaaneponvasantham

தமிழக அரசு விருது உற்சாகமும் பெருமையும்  தருகிறது  என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

தமிழக அரசு விருது உற்சாகமும் பெருமையும் தருகிறது என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

Latest News
தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா தேர்வாகியுள்ளார். 2012ல் கெளதம் வாசுதேவ் மேனன் . இயக்கத்தில் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார். இது பற்றி நடிகர் ஜீவா பேசும் போது " ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம் . கிடைக்கிற விருது அங்கீகாரம் கலை ஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்...