Monday, February 6
Shadow

Tag: kaari

காரி திரை விமர்சனம்  (நம் சமுதாயத்தின் அங்கீகாரம்)  (Rank 4.5/5)

காரி திரை விமர்சனம் (நம் சமுதாயத்தின் அங்கீகாரம்) (Rank 4.5/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள காரி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊருக்கே கோயில் நிர்வாகம் என்று முடிவாகிறது. அதுமட்டுமின்றி வறட்சியின் பிடியில் இருக்கும் அந்த கிராமத்தை இராமநாதபுரத்தின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயலும் அரசாங்கம், அடங்காத காளைகளை அடிமாடாக்கி சுகம் காணும் மாட்டிறைச்சி நிறுவனத்தினரின் ஆணவ வெறி ஆகியனவும் அந்தக் கிராமத்தை மிரட்டுகிறது. இவற்றை எப்படி அந்தக் கிராமம் எதிர்கொண்டது என்பதை மண்மணத்தோடு சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் பந்தயக்குதிரை ஓட்டுபவராக அறிமுமாகிறார் சசிகுமார். பின்னால் காளைகளோடு உறவாடுவதற்கான முன்னோட்டமாக அது அமைந்திருக்கிறது. தானுண்டு தன் வேலையு...