கடைசி விவசாயி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டனின் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
கிராமத்தில் விவசாயியாக வாழும் மாயாண்டிக்கு விவசாயத்தை தவிர வேறெதுவும் தெரியாது. அதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் யோகிபாபு. மேலும் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் , விவசாயத்தின் அருமையை உணர்த்தும் படமாகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த கடைசி விவசாயி திரைப்படம். இக்கதையை மிகவும் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் எடுத்துள்ளார் மணிகண்டன்.
படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்லாண்டி. மேலும் யானையை வைத்து பிழைப்பு நடத்துபவராக யோகிபாபுவும், வாழ்க...
