
காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் Rank 3.5/5
இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி
காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெய்ன்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம காதலிக்க நேரமில்லை
கதைக்குள் போகலாம் ,:
ஜெயம் ரவி டிஜே பானு இருவரும் காதலிக்கிறார்கள் பானுவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் ஜெயம் ரவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. இதனால் இந்த காதல் ஜோடி பிரிகிறது அதேபோல நித்தியா மேனனும் ஜான் கொகேனும் காதலிப்பார்கள் ஆனால்...