Wednesday, December 4
Shadow

Tag: #kajalagarwal #Girls

சேலையில் தான் பெண்களுக்கு கவர்ச்சி அதிகம் – காஜல் அகர்வால்

சேலையில் தான் பெண்களுக்கு கவர்ச்சி அதிகம் – காஜல் அகர்வால்

Latest News
“அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள். தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரி குண்டான நடிகைகளைத்தான் பிடிக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். குஷ்பு, ஹன்சிகாவுக்கு உடல் எடை கூடி இருந்ததால்தான் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என்றும் கூறினார்கள். எனக்கு குழப்பமாக இருந்தது. ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் கேட்க கூடாது. நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குண்டாகவோ ஒல்லியாகவோ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் அழகை கூட்டுவதற்காக மட்டும் மெனக்கெட்டேன...