எனக்கு ஜாதி மதம் அரசியல் தேவை இல்லை என் நாட்டு மக்கள் தான் முக்கியம் – கமல்ஹாசன்
ஞாயிற்றுக் கிழமை (05/03/2017) #உலகநாயகன் #கமல்ஹாசன் அவர்கள் நற்பணி இயக்க நிர்வாகிகளுடனும், சட்ட ஆலோசகர்களிடமும் உரையாடியதிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு:
#நற்பணி இயக்கம் இன்னும் பெரிய சமுதாய நல்வழி (அரசியலில்லாமல்) இயக்கமாக மாறுவதற்கு இன்று கால்கோல் நடபட்டது. அதற்கான ஆயத்தத்தில் முன்னேற்பாடுகளைத் தான் இப்போது உங்கள் மூலமாக ஆரம்பித்துள்ளேன்.
எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நாம் செய்வது #மக்கள் அரசியல். வாக்கு #அரசியல் அல்ல.
வாக்கு அரசியல் சாதி, மதம் பார்க்கத் தூண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன். எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை. அதனால் தான், இன்று என்னுடன் அனைவரும் சேர்ந்துள்ளனர்.
நல்லது செய்வதற்கு சாதி மதம் தேவையில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருந்தால் போதுமானது. அது உங்களிடத்தில் உள்ளது. அதற்கு உறுதுணையாக நான் இருப்பதில் எனக்கு ம...
